அலட்சிய போக்குடன் செயற்படும் வவுனியா மின்சார சபை- அச்சத்தில் மக்கள்! samugammedia

கடந்த இரண்டு நாட்களாக மின்சார கம்பிகள் மேல் மரக் கிளைகள் சரிந்து வீழ்ந்துள்ளதனை பாவனையாளர்கள் யாழ் மற்றும் வவுனியா மின்சாரசபை அலுவலகத்திற்கு இரண்டு நாட்களாக முறைப்பாடளித்தும் மின்சார சபை அதிகாரிகளால் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 

இதனால் வவுனியா சிறீராமபுரம் கிராமத்தின் தொல்காப்பியர் வீதியின் வதிவிட மின் பாவனையாளர்கள் தமது மின் உபகரணங்களை உபயோகிக்காது அச்சத்துடன் காணப்படுகின்றனர். 

இக்கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டிருந்த வேளையும் இ.மி.ச. அதிகாரிகள் பாராமுகமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply