பசு மாட்டுடன் வெளியேறினார்..! வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்.!samugammedia

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரால் செல்லமாக வளர்க்கப்பட்ட பசுமாடு ஒன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அகற்றப்பட்டு கிளிநொச்சிக்கு அனுப்பிவைக்கப்ட்டிருந்ததுடன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

எனினும் தாம் பதவி விலகுவதற்கு முன்னர் அதாவது நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனினும் இன்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாணத்திற்கு பல சேவைகளை ஆற்றியதாகவும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வடமாகாண முன்னாள் ஆளுநர் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்கிய சேவைகளுக்காக பல்வேறு தரப்பினருக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையொப்பமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *