சீனாவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் கடும் நெருக்கடி நிலையில் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியாவின் பல பகுதிகளிலும் மக்கள் கோடை வெப்பத்தால் கடுமையாக அவதிப்படுகின்றனர். அதற்கமைய, சீனாவில் நாடு முழுதும் வெப்ப நிலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
Shandong மாநிலத்திலும் பெயச்சிங்கிலும் அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெய்ச்சிங்கில் வெப்பம் 36 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும். Jinan, Tianjin, Zhenzhou முதலிய வட்டாரங்களிலும் அதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பத்தைச் சமாளிக்க மில்லியன் கணக்கான வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. மேலும் வறட்சியால் பயிர்களுக்குப் பாதிப்பு. விளைச்சல் குறைந்து உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
The post சீனாவில் அதிகரிக்கும் வெப்ப நிலையால் திண்டாடும் மக்கள் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.