யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் 14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! samugammedia

யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் 14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 18/05/2023 மதியம் நடைபெற்றது.

 

பொதுச் சுடரினை ரெலோ இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் இறுதி யுத்தத்தின் நேரடிச் சாட்சியமும் ஆன சபா குகதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் பின்னர் அகவணக்கம் மலர் அஞ்சலி நினைவேந்தல் உரை என்பன இடம் பெற்றன. கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

சபா குகதாஸ் அவர்கள் தனது உரையில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சர்வதேச நீதியே வேண்டும் என்றும் உள்ளக பொறிமுறைகள் தோல்வியடைந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களும் அதனை நிராகரித்து விட்டனர் என்றும் தமிழின அழிப்பு நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்று அங்கிகரிக்க வேண்டும்  எனவும் தெரிவித்தார்

Leave a Reply