ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகவே அந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.