ராஜகுமாரியின் மரணம் – நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தம் – மரணத்தில் சந்தேகம்.! samugammedia

கடந்த 11ம் திகதி பொலிசாரினால் கைது செய்யப்பட்ட வைத்தியசாலைல் அரணமடைந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த விசாரணைகள் தற்போது காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில். அத்துடன், வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் நான்கு உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தப்படுவாரா அல்லது இடமாற்றம் செய்யப்படுவாரா என்பதை தீர்மானிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த பெண், அவர் பணிபுரிந்த வேலை வீட்டில் தங்கப் பொருட்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வீட்டின் உரிமையாளர் தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply