சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் இன்று பிற்பகல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இது இடம்பெற்றுள்ளது.
பிரேதப் பரிசோதனையில் உயரத்தில் இருந்து விழுந்ததில் உடல் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.