திருகோணமலையில் ரயில் கடவை காவலாளி ரயிலுடன் மோதி உயிரிழப்பு! samugammedia

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ரயில் கடவை காவலாளி ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

இவ் வனர்த்தம் இன்று (20) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பீ.ஏ.றனசிங்க (63 வயது) ஜெயபுர- திருகோணமலை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-திருகோணமலை பிரீமா ஆலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பத்தினி புறத்தில் உள்ள ரயில் கடமையை அண்மித்த போது காவலாளி உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வேகமாக சத்தத்தை அவதானித்து கடவையை மூடுவதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் வேகமாக சென்ற போது ரயிலுடன் மோதியதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை தம்பலகாமம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரயில் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

Leave a Reply