யாழ், பல்கலையில் "லண்டனில் இருந்து விமல்" எனும் நூல் அறிமுக விழா! samugammedia

பிரபல ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் எழுதி வெளியிட்ட “லண்டனில் இருந்து விமல்” எனும் நூல் அறிமுக விழா இன்று (20) மாலை 4.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமைதாங்கிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்.

கலைத்துறை சார்ந்தோர் நூல் பற்றிய சிறப்புரைகளையாற்றிருந்தனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களுட்பட நூல் வெளியீட்டு நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.Leave a Reply