சட்டவிரோதமாக மரப் பலகைகளை கடத்த முற்பட்ட ஒருவர் கைது! samugammedia

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மரப் பலகைகளை கடத்திச்செல்லமுற்பட்ட ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பலகைகளை டிப்பர் வாகனத்தில் கடத்திச் செல்வதாக கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் கல்குளம் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது தேக்கு மற்றும் பாலை மரப்பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்குளம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸ் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட தேக்கு மற்றும் பாலை மரப்பலகைகளை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.


Leave a Reply