அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் நியமனங்களின் போது பொதுஜன பெரமுன சார்பில், மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதும் ஒருவரை மட்டுமே ஜனாதிபதி நியமித்திருந்ததாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் வடமேல் மாகாண ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்ட தலக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனி ஆளுநர்களை மாற்றவேண்டாமென ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.