கிழக்கு ஆளுனராக தமிழ் பேசும் ஒருவரான செந்தில் தொண்டமானின் நியமனத்தை வரவேற்கிறோம்- மஹ்ரூப்! samugammedia

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படுவர் என கிழக்கில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் நினைத்தார்கள் ஆனால் தமிழ் பேசும் ஒருவரான செந்தில் தொண்டமானின் நியமனத்தை நாமும் எமது கட்சியும் வரவேற்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

 கிண்ணியாவில் இன்று (21) அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் கூடுதலான மலையக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

திருகோணமலை மட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள் இதனது கடந்த காலங்களில் மக்கள் காங்கிரஸ் அவர்களை கௌரவித்துள்ளது இந்த ஆளுனர் நியமனமும் வரவேற்கத்தக்கது .ஜனாதிபதியின் நல்ல பல திட்டங்களுக்காக செயற்படுவதற்காக நியமிக்கப்பட்டிருப்பது எமது சமூகத்தின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கக் கூடிய வாறு இருக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *