யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் நடாத்திய முப்பெருந்தமிழ் விழா ! samugammedia

உலக  பண்பாட்டுத்  தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப்  பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் நடாத்திய முப்பெருந்தமிழ் விழா இன்று(21)  யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் மாலை  2.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் தமிழ்மரபு அறக்கட்டளை  பண்பாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷினி அவர்களும் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

தமிழர்களின்  பண்பாட்டை எடுத்தியம்பும் ஒயிலாட்டம் , காத்தவராயன் கூத்து மற்றும் ஒயிலாட்டம் உட்பட பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பல்வேறு துறைகளில் மிளிர்ந்துகொண்டிருப்போருக்கான விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இவ் விழாவில் கலைத்துறையில் ஆர்வமுள்ளோர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *