யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இன்றைய தினம் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.




