துபாயில் உயிரிழந்த யாழ். இளைஞன் – கிடைக்காத நியாயம்..! தாயார் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை samugammedia

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகனின் சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதி உதவியை பெற்றுதருமாரு கோரிக்கை விடுக்கும் முகமாக அவரது தாயார் இன்று ஊடக சந்திப்பொன்றினை அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த (27.04.2023) அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்ட எனது மகனின் மரணத்தை தற்போது தற்கொலை என கூறுகின்றார்கள்.

நான் தூதரகம் ஊடாக பல தரப்பினர்களுக்கு நியாயம் கேட்டு கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட எனது மகனின் சடலத்தை கொண்டு வருவதற்கு 14 இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது.

மகனின் சடலத்தை நாளை மறுதினம்(24.05.2023) தாங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

அதற்கு தேவையான நிதியை தந்து உதவி செய்ய வேண்டும் என்று புலம்பெயர் தமிழர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். என கூறியுள்ளார்.

Leave a Reply