யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் நாளை புதன்கிழமை(24) காலை 9 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது.
கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியக திறப்பு விழாவுடன் இணைந்து தொல்லியல் கண்காட்சியும் தொல்லியல் அருங்காட்சியக இணைத்தளமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம், வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் வரலாற்றுத்துறை முதல் பேராசான் கலாநிதி கா.இந்திரபாலாவால்அடித்தளமிடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கத் தூதரகத்தினதும், மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரணைகளாலும் தூர நோக்குடன் நவீன அருங்காட்சியகமாக பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் உருப்பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.