இலங்கை கடற்படையினரால் 14 பேரின் சடலங்கள் மீட்பு: தேடுதல் பணிகள் தொடர்கின்றன! samugammedia

இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின்  மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது

இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டனர். கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை,  விபத்து இடம்பெற்ற நேரம் இந்த மீன்பிடிக் கப்பலில் 38 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply