தையிட்டி விவகாரம்: பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்டோம்! – கஜேந்திரன் எம்.பி samugammedia

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அவர் கருத்துரைத்துள்ளார்.

அதிகார தரப்பினரிற்கு துணை போவதன் மூலம் தனது  பதவி உயர்வினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என ஜனாதிபதி நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

தையிட்டியில் போராட்டம்  நடத்தப்பட்டு வரும் நிலையில், பலாலி பொறுப்பதிகாரி இந்த போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தவறான கருத்துக்களைக் கூறி, அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சி செய்தார்.

இருந்தாலும், நாங்கள் எங்களுடைய சட்டத்தரணிகள் ஆலோசனைகளோடு சட்டம் மற்றும் நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டு தனியார் காணியில் நின்று போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம்.

பல மோசமாக கெடுபிடிகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டபோதும், நாங்கள் ஒதுங்கிச் செல்லவில்லை.

23ஆம் திகதி காலை வேளையில் போராட்டத்தை ஆரம்பித்தபோது, நாங்கள் பலவந்தமாக அந்த இடத்திலிருந்து கைது செய்யப்பட்டும், பலவந்தமாக இழுத்தும் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டோம் என்றார்.

Leave a Reply