தங்கத்தின் விலையில் மேலும் சரிவு- இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

சில தினங்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய சந்தை நடவடிக்கைகளின் படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 15 டொலர்களால் வீழ்ச்சியடைந்து இப்போது 1945 டொலர்களாக நிலவுகிறது.

அமெரிக்க பொருளாதார ஸ்திரநிலை தொடர்பான ஐயங்கள், தங்க விலை வீழ்ச்சிக்கான முக்கிய காரணியாக கூறப்படுகின்றது.

இந்த விலை வீழ்ச்சியானது, இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (25) கொழும்பு செட்டியார்த்தெருவில் தங்கம் 2000 ரூபாயால் குறைந்து, 24 கரட் தங்கப் பவுண் 166,000/- ஆகவும் 22 கரட் தங்கப் பவுண் 152,166/- ஆகவும் நிலவின.

இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம்(26)  24 கரட் தங்கத்தின் விலை 166,900 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 153,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *