சினோபெக் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்குவாதம்..! திணறினார் கஞ்சன..!samugammedia

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட  இணைக்கப்பட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்குமிடையில் நாடாளுமன்றத்தில் இன்று வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன நேற்று தெரிவித்த கருத்துக்கு சமிந்த விஜேசிறி இன்று பதில் வழங்கினார்.

இதன்போது அவர்  தெரிவிக்கையில்,  

ஜனக  ரத்நாயக்கவை  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான விவாதம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 22 (91) 09 இ10 மற்றும் 11 ஆகிய அத்தியாயங்களுக்கு அமைய செயற்படாமல் விவாத உரையின் போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எனது தனிப்பட்ட விடயங்களை குறிப்பிட்டு முறையற்ற வகையில் கருத்துரைத்துள்ளார்.

நான் அவருக்கு திருமண யோசனை ஒன்றை கொண்டு வந்ததாக குறிப்பிட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையின் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். காதலித்த பெண்ணையே நான் திருமணம் முடித்தேன். எனது திருமணத்திற்கு என பெற்றோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். எதிர்ப்புக்களினால் காதலித்த பெண்ணை நான் கைவிடவில்லை.

ஒவ்வொரு பெண்ணை காதலித்து கைவிடும் கொள்கை எனக்கு கிடையாது. ஆகவே என்னை உங்களுடன்  ஒப்பிட வேண்டாம். உங்களுக்கும் எனக்கும் வானம் , பூமி போல்  வித்தியாசம் உள்ளது. தனிப்பட்ட விடயங்களை குறிப்பிட  முடியும். ஆனால் அவ்வாறான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட போவதில்லை.

ஊழல் மோசடியற்ற வகையில் அரசியலில் ஈடுபடுகிறேன். என் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டுங்கள். உடன் பதவி விலகுவேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *