வடமாகாண போட்டியில் முன்னணி பெற்ற பாடசாலை அணிக்கான உதைபந்தாட்ட உதவிகள் வழங்கி வைப்பு..!samugammedia

முல்லைத்தீவு முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை பெண்கள் உதைபந்தாட்ட துறையை ஊக்குவிப்பதற்காகவும், வடமாகாண போட்டியில் 3ம் இடம் பெற்றமைக்காகவும் பாடசாலை அணிக்கான உதைபந்தாட்ட காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் நோக்காக முல்லைத்தீவு, குமுழமுனை சேர்ந்த தற்போது கனடா வசிக்கும் முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் இதற்கான முழுமையான அனுசரணையினை வழங்கியிருந்தார்.

முல்/முத்தையன்கட்டு இடதுகறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளர், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர்,  புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணியாக பங்குகொண்டு வெற்றியிட்டிய பாடசாலை மாணவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply