காதலலை மறுத்தததால் திருமண நாள் அன்று காதலி மீது அசிட் வீசிய காதலன்…! இலங்கையில் பரபரப்பு.! samugammedia

திருமண நாளான இன்று மணமகளின் காதலனால் அசிட் வீசித் தாக்கியிருந்த நிலையில் மணமகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது வெலிகம மதுரகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காதலியின் வீட்டிற்கு இன்று அதிகாலை 03 மணியளவில் சென்றிருந்த சந்தேக நபர் அசிட் வீசித் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த மணமகள், தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது முன்னாள் காதலனே அசிட் வீச்சை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் இந்த யுவதி வெலிகம மதுரகொட பிரதேசத்தில் வசிக்கும்போது, 31 வயதுடைய ஆண் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும் பின்னர், பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை முறித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவமானது பழிவாங்கும் நோக்கில் இளைஞரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *