இலங்கைக்கு மற்றுமொரு இழப்பு – இராஜதந்திர அதிகாரி உயிரிழந்தார்! samugammedia

இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரியான ஜெயந்த தனபால இன்று அவரது 85ஆவது வயதில் காலமானார்.

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜெயந்த தனபால, 1998-2003 க்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *