மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரிப்பு ! samugammedia

நாட்டில் பல மாவட்டங்களில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. 

கண்டாவளை  கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சிலரது கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒருவர் வளர்த்து வந்த சவாரி மாடுகளில் ஒன்றுக்கு பெரியம்மை நோய் தாக்கம் காரணம் ஏற்பட்டுள்ளது.  

இதனால் குறித்த மாடு இரண்டு வாரங்களுக்கு முன்பே இறந்துள்ளதாகவும் ஏனைய கால்நடையில் ஒன்று கடுமையாக பெரியம்மை நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

நோய் காரணமாக உணவு இற்றி நீரும் அருந்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் கால்நடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *