வடக்கில் தொல்பொருள் சின்னம் – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் – இணக்கம்.! samugammedia

வடக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்கள் தொடர்பில் தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முன்னெடுத்த கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் தொல்பொருள் இடங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் ஆராய்வதற்காக அந்த பிரதேசங்களின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

கலாசார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் அவர்களுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாரி ஆகிய தொல்பொருள் இடங்கள் தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் அந்த கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *