தமிழர் பகுதியில் மற்றுமொரு சோகச் சம்பவம்..! கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி..! samugammedia

கிளிநொச்சியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்  புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபொழுது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா சஞ்சீவன் – 36 வயதுடைய  ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதிக மது போதையில் பயணித்ததாலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *