தெற்கு அரசியலில் கால்பதிக்கவுள்ள மற்றுமொரு அரசியல் கூட்டணி…!இரகசியமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்..!samugammedia

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் ஓய்ந்த நிலையில் தங்போது பேசுபொருளாக காணப்படுவது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவே.

இவ்வாறனதொரு நிலையில் தென்னிலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பதற்கான இரகசிய கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புதிய கூட்டணி மூலம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தெரிவு செய்து களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவே இந்த பொது வேட்பாளராக நியமிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு மதத் தலைவர்கள், சிறிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *