பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேடப்படும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நபர் ஒருவர் மீது டி-56 துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருப்பினும் மேற்படி புகைப்படத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர் 33 வயதுடைய நபர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இடது கை மணிக்கட்டில் இருந்து மேல் நோக்கி பறவையின் இறகு போன்ற கருப்பு நிறத்தில் பச்சை குத்தியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு – 071 859 1733, நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு – 071 85917335, நிலைய அதிகாரி விசாரணை பிரிவு 1 – 071 8596503 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

The post நபர் ஒருவரை அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

