வவுனியா நைனாமடுவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சீனி தொழிற்சாலைக்கு தாய்லாந்து நிறுவனம் ஒன்று முதலீடு செய்ய இருக்கு நிலையில் அதன் பின்னணியில் சீனா உள்ளதாக சந்தேகங்கள் வலுக்கிறது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வவுனியா நைனாமடுப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சீனி தொழிற்சாலையுடன் கூடிய உற்பத்திச் செய்கைத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் பல வருடங்களுக்கு முன்னரே திட்டங்கள் வகுக்கப்பட்டது.
ஆனால் இலங்கையில் உள்ள முதலீட்டாளர்கள் பாரிய நிதித் தொகையினை செலவிட முன் வராத காரணத்தால் குறித்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
குறித்த திட்டம் தொடர்பில் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தீர்மானமும் எடுக்கப்பட்டு, அனுமதிக்காக சுற்றுச்சூழல் அதிகார சபைக்கும் அனுப்பப்பட்டது .
இந்த நிலையில் மே 19, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மெய்நிகர் வழியில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்கள், வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிக்குளம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை (கிழக்கு) மற்றும் மாந்தை ஆகிய பிரதேச செயலாளர்களுடன் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக புதிதாக பதிவு செய்யப்பட்ட சிலோன் சுகர் இண்டஸ்ட்ரீஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தால் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் திட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த Sutech Engineering நிறுவனம் செயல்படுத்த உள்ள நிலையில் இதன் பின்னணியில் சீனா அரசாங்கமோ அல்லது சீன முதலீட்டாளர்கள் என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.
ஏனெனில் தாய்லாந்தை தலைமையகக் கருதப்படும் sutech Engineering நிறுவனம், சர்க்கரை ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர், கம்போடியா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளது.
இதன் பின்னணியில் புதிதாக பதிவு செய்யப்பட்ட சிலோன் சுகர் இண்டஸ்ட்ரீஸ் அன்ட் ஹோல்டிங் (பிரைவேட்) லிமிடெட் மூலம் இந்தத் திட்டத்தில் சீன முதலீடு செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.

