ஊடகவியலாளர் நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! samugammedia

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் இன்று நடைபெற்றது. 

வவுனியா ஊடகஅமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு, மலர்தூவி, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அவர் தொடர்பான நினைவு பகிர்வுரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் நிகழ்த்தியிருந்தார். 

நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *