அங்காடியில் இலங்கைப் பெண்ணின் மோசமான செயல்! samugammedi

மின்சார உபகரணகள் விற்பனைக் காட்சியறையில் பெண் ஒருவர் மடிக்கணினியைத் திருடிய காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளன.

பண்டாரகமவில் உள்ள விற்பனைக் காட்சியறையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருடப்பட்ட  மடிக்கணினியின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

மின்சார உபகரணம் வாங்குவதாக கூறி வந்த குறித்த பெண், வர்த்தக நிலைய ஊழியர்களிடம் தனது கணவர் வரும் வரை அங்கேயே இருப்பேன் என கூறிய   மடிக்கணினியை திருடியுள்ளார்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  கேமராவில்  பெண் திருடியமை பதிவாகியுள்ள நிலையில்  சந்தேக நபரான பெண்ணைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *