14 வயது மாணவிக்கு ஆபாசப்படங்களை அனுப்பிய ஆசிரியர்..! samugammedia

தம்புத்தேகமவில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும்  14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு   ஆபாசப்  படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டில்  அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோர் நன்னடத்தை அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (30) சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் இன்று (31) தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *