ரெஜி ரணதுங்கவின் 15வது நினைவு தினம் உடுகம்பலவில் அனுஸ்டிப்பு..!samugammedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான மறைந்த ரெஜி ரணதுங்கவின் 15வது நினைவு தினம் இன்று (31) ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் உடுகம்பலவில் நடைபெற்றது.

உடுகம்பலையில் அமைந்துள்ள ரெஜி ரணதுங்கவின் நினைவிடத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது உறவினர்கள் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 ரெஜி ரணதுங்க, திருமதி நந்தனி ரணதுங்கவை மணந்து ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். தற்போதைய ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

 இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *