
“….‘கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி அவர்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களை எடுத்து வரவில்லை; மாறாக, தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்ற பொருட்களையே அவர் கடத்தி வந்திருக்கிறார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால், போதைப் பொருட்கள் பிடிபடும் சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளால் அவற்றை பறிமுதல் செய்ய முடியுமே ஒழிய, விற்பனை செய்ய முடியாது.