ரணிலுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி..! அரசு விழிப்பாக இருக்க வேண்டும்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி நடக்கின்றது. அது தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

‘தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்த நாட்டை நிர்வகிக்க முடியும். எனவே, அவருக்கு ஆதரவு வழங்க வேண்டியது கட்டாயம். அதைவிட மாற்று வழி இல்லை.

அரச தலைவரும்,  அரசும் விழிப்பாகவே இருக்க வேண்டும். ஜனாதிபதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் சர்வதேச சூழ்ச்சி நடக்கின்றது. இந்த சூழ்ச்சி ரணிலிடம் எடுபடாது என்ற நம்பிக்கை உள்ளது.’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *