தீ பரவலால் சேதமடைந்த தொலைத்தொடர்பு கேபிள்கள்..! அம்பாறையில் சம்பவம்..!samugammedia

நீண்டகாலமாக  வெட்டப்பட்டு வீதியோரத்தில் காணப்பட்ட மரம் உள்ளிட்ட குப்பைகளுக்கு இனந்தெரியாதோர் தீ வைத்ததில் சிறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் இன்று   அதிகாலை வேளை தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
இனந்தெரியாதோர் வைத்த தீ காரணமாக அப்பகுதியில் தீச்சுவாலை அதிகரித்து அருகில் இருந்த மின்சார தொலைத்தொடர்பு வயர்கள் எரிந்து சேதமடைந்திருந்தன.
இதனை அடுத்து மேலும் தீ பரவாமல் இருப்பதற்கு தண்ணீர் வாளிகளினால்  நிரப்பப்பட்டு  தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஒரு மாதத்திற்கும் மேலாக  வைத்தியசாலை வளாகத்தில் இருந்து   பாரிய மரங்கள் வெட்டப்பட்டு இவ்வாறு   வீதியோரத்தில் போடப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *