கடந்த சில மாதங்களாக மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இவ் வேளையில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த நீர் தேக்கம் மிக பாதுகாப்பு வலயமாக உள்ள போதிலும் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் பொலிசார் கவனம் செலுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
அதேவேளை மாணிக்க கற்கள் அகழ்வு இடம் பெற்ற பகுதிகளில் பாரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


