பொசன் பௌர்ணமி தினத்தில் மஸ்கெலியா வைத்தியசாலையில் நிகழ்வு..!

பொசன் பௌர்ணமி தினமான இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடலை அவித்து தானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வைத்திய அதிகாரி எச்.ஈர்ஷாட், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் வைத்திய சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வைத்தியர்கள் மேற்கொண்டனர்.
நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த குருவான தப்போ வன தேரரின் மத போதனை நிகழ்வு இடம் பெற்றது.
அனைத்து தொடர்ந்து அங்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் ரக்காடு கிராமத்தில் இயங்கும் அதிரடி படையினர், நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *