இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பு 03 கொள்ளுப்பிட்டி இராணி வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு விடுக்கப்பட்ட உயிர் ஆபத்து மற்றும் தொடரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயேஇன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
இந்த கைது நடவடிக்கை ஏற்கனவே சபாநாயகருக்கு அறிவிக்ப்பட்டிருந்த போதும் பொலிசாரின் நடவடிக்கையின் பின்னர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியும் என சபாநாயகர் இன்று சபையில் குறிப்பிட்டிருந்தார்.
