ஊடகத்துறையை முடக்கினால் ஊழல் அதிகரிக்கும்…!இராதாகிருஸ்ணன் எம்.பி சபையில் காட்டம்..!samugammedia

ஊடகத்துறையை முடக்கி  நாட்டில் ஊழலை இல்லாதொழிக்க முடியாது எனவும் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று உரையாற்றும்போதே  இராதாகிருஸ்ணன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஊடகத்துறையை முடக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுகிறது.ஊடகத்தை முடக்கி நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது.

ஊடகங்கள் ஊடாகவே ஊழல்வாதிகள் வெளி வருகிறார்கள்.ஆகவே ஊடகத்துக்கு எதிரான செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *