சாமிமலையில் மண் திட்டு சரிவு…! மக்கள் அவதி..!samugammedia

மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓய்வில் அமைக்கப்பட்டுள்ள அணை கட்டு பகுதியில் உள்ள ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு உரித்தான வாழை மரங்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் மண் திட்டும் வாழை தோப்புகளும் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் மஸ்கெலியா தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும்  அணைக்கட்டு பகுதியில் இருந்து நீரை பெற்று கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட நீர் வடிகால் திணைக்கள அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று அங்கு பார்வை இட்டு அதனை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *