எதிர்கட்சி தலைவரை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜீவன்..! வாயடைத்து போன சஜித்..!samugammedia

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச தோட்ட மக்களுக்கு வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்காத நிலையில் வீடுகள் எங்கே என தன்னிடம் கேள்வி கேட்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அமைச்சு பதவியை எடுக்கவில்லை என தெரிவித்திருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,  ஊவா மாகாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸினால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகை தருவதாக கூறிய சஜித் பிரேமதாச இறுதிவரை அங்கு வரவில்லை என்றும் இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு
கேட்பார் என தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரையில் தோட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *