மூதூரில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடு முன்னெடுப்பு! samugammedia

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஜாயா நகரில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடானது தனியார் வீடுகள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், பொது இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் டெங்கு நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்திருந்தனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் , மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மூதூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், RDS உறுப்பினர்கள், மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள், CSD, சனசமூக நிலைய பிரதிநிதிகள், சமுர்த்தி பயனாளிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *