நாட்டில் மீண்டும் ஆயுத போராட்டம் ஏற்படும் – எச்சரித்த ஹெக்டர் அப்புஹாமி! samugammedia

இலங்கையில் தற்போது  ஹிட்லர் ஆட்சியே நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை.

ஆனால் மாறியது ஜனாதிபதி ஒருவர் சென்று, இன்னொருவர் மாறியது மட்டுமே.ஜனாதிபதியாக புதிதாக வந்தார், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

அன்று இருந்த பொருளாதார வீழ்ச்சி இன்றுவரை காணப்படுகிறது மாற்றம் என்பது இல்லை.

மக்கள் பிரச்சனைகளோடே, குடும்பத்தை நடத்தி வருகின்றனர் 

நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு மக்கள் நீதி கேட்டால் உங்களை கைது செய்வோம், என அரசு அச்சுறுத்தல் செய்வது நியாயமா.?

மீண்டும் நாட்டில் சாதி இனபேத உருவாகி வருகிறது. இதன் மூலம் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை உருவாகும்.அரசாங்கமே மக்களிற்கு பிரச்சனை வழங்கிங்குகின்றது அதற்கு நீதி கேட்டால் அவர்களை கொல்லுவேன் என்று கூறினால் என்ன..?  இது ஹிட்லர் ஆட்சி போன்றே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *