பெறப்பட்டுள்ள புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பாக 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவான அதாவது 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த அதாவது 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம் – 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
களுத்துறை மாவட்டம் – 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கண்டி மாவட்டம் – 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
குருநாகல் மாவட்டம் – 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இரத்தினபுரி மாவட்டம் – 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
காலி மாவட்டம் – 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மாத்தளை மாவட்டம் – 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நுவரெலியா மாவட்டம் – 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மாத்தரை மாவட்டம் – 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
திகாமடுல்ல மாவட்டம் – 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
யாழ்ப்பாண மாவட்டம் – 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வன்னி மாவட்டம் – 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மட்டக்களப்பு மாவட்டம் – 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
புத்தளம் மாவட்டம் – 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அனுராதபுர மாவட்டம் – 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பொலன்னறுவை மாவட்டம் – 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பதுளை மாவட்டம் – 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மொனராகல மாவட்டம் – 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கேகாலை மாவட்டம் – 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
2023ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
