மனித உடலின் மண்டை ஓடு உட்பட பல எலும்புகள் மீட்பு – வெறிச்சோடிய பிரதேசம் .! samugammedia

எம்பிலிபிட்டிய – கும்பகோதர – மானெல் மாவத்தை பிரதேசத்தில் சந்திரிகா ஏரிக்கு முன்பாக மனித உடலின் மண்டை ஓடு உட்பட பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பொலிஸார் இந்த எலும்புகளை கண்டெடுத்துள்ளனர்.

ஆண் ஒருவரின் மண்டை ஓடு என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்திற்கு முன்னரே குறித்த இடத்திற்கு உடல் உறுப்புகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இடம் வெறிச்சோடிய பிரதேசம் என்பதால் இதனை யார் கொண்டு வந்தார்கள் என்பதை இதுவரையில் அறியமுடிவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கொலை நடந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை எனவும், மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் பாகங்கள் மாந்திரீக சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சடலத்தின் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக எம்பிலிப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *