வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்டது. அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்கப்பட்டது.
காரில் இருந்த 26, 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடக பிரிவு மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும், வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
