இலங்கை இராணுவ வீரரின் மோசமான செயல்..! அதிரடியாக கைது samugammedia

ஹம்பகமுவ, தனமல்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 08 கிலோ 05 கிராம் உலர் கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் அம்பலாந்தோட்டை, மயூரபுர பொறியியல் சேவை படைப்பிரிவை சேர்ந்த 24 வயதுடைய பொது சிப்பாய் என தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

உலர் கஞ்சாவை கடத்துவதற்காக வைத்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *