புகையிரத சேவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு…! புகையிரத திணைக்களம் அறிவிப்பு..!samugammedia

கடலோரப் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மொரட்டுவ, எகொடஉயன ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் உடைந்துள்ளதால் கரையோரப் ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணிகளுக்கு செல்வோர் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் நிலையத்திற்கு அருகில் உடைந்த தண்டவாளம் தற்போது சீர்செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *