காதல் தோல்வி…! தவறான முடிவெடுத்த கடற்படை வீரர்..!samugammedia

காதல் தோல்வியால் மனம் உடைந்த கடற்படை வீரர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

கலேவெல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த கடற்தொழில் வீரர்  இரண்டு குழந்தைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த கடற்படை வீரர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

 இதனை அறிந்த மனைவி தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் மனம் உடைந்த கடற்படை வீரர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *